செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (09:39 IST)

தீனி திண்பதற்கே பாஜக எம்.பிக்கள் லாயக்கி: காங். பிரமுகர் ஆவேசம்!

தீனி திண்பதற்கே பாஜக எம்.பிக்கள் லாயக்கி:  காங். பிரமுகர் ஆவேசம்!
கர்நாடகத்தில் உள்ள பாஜக எம்.பிக்கள் நொறுக்கு தீனிகளை தீனிகளை சாப்பிடத்தான் பிரயோஜனம் ஆவார்கள் என பிரியங்க் கார்கே பேட்டி.
 
ஆம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே தனது சமீபத்திய பேட்டியில் பாஜக எம்.பிக்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, கர்நாடகத்தில் பாஜகவுக்கு 25 எம்.பி.க்கள், 3 மத்திய மந்திரிகள் உள்ளனர். 
 
இவர்கள் டெல்லிக்கு சென்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் நொறுக்கு தீனிகளை சாப்பிடத்தான் பிரயோஜனம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக நின்று கேள்வி கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க அவர்களுக்கு தைரியம் இல்லை. 
 
பாஜக மேலிட தலைவர்கள் சொல்வதை கைகட்டிக் கொண்டு கேட்டுவிட்டு திரும்பி வருகிறார்கள். இதற்காகத்தான் கர்நாடக மக்கள் அவர்களை எம்.பி.க்களாக தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது கர்நாடக அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.