1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (14:40 IST)

மேதகு இந்த புத்தகத்தின் தழுவலா? கிளம்பியது சர்ச்சை!

மேதகு படத்தின் கதை ஒரு புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது மேதகு. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் இயக்குனர் தி கிட்டுவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படம் மயூரன் என்ற எழுத்தாளர் எழுதிய விடுதலைப்புலிகள் என்ற புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.