1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (11:16 IST)

மெர்சலை இணையத்தில் வெளியிடுவோம்: மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது விஜய்யின் மெர்சல் படத்தினை முதல் தரத்துடன் வெளியிடப்போவதாக படக்குழுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

 
நேற்று விஜய்யின் ‘மெர்சல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. வெளியான  நேரத்தில் இருந்து இதுவரை 90 லட்சம் பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர். 6.89 லட்சம் லைக்ஸ்கள் பெற்று  சாதனை படைத்துள்ளது.
 
மெர்சல் படத்தின் முதல் நாள் டிக்கெட் கிடைக்குமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்,  இப்படம் இணையத்தில் வெளியானால் படத்தின் வசூல் நிச்சயம் பாதிக்கும். இந்நிலையில் இப்படத்தினை இணையத்தில் முதல் தரத்துடன் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.