செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (22:54 IST)

'மெர்சல்' டீசர்: 5 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் பெற்று சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியான நிலையில் இந்த டீசர் முதல் வினாடியில் இருந்தே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஒவ்வொரு வினாடியும் பெற்று வருகிறது.



 
 
அந்த  வகையில் சரியாக 5 மணி நேரத்தில் 40 லட்சம் அதாவது 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புரிந்துள்ளது. 
 
இதற்கு முன்னர் நள்ளிரவில் டீசர் வெளியானதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதை திட்டமிட்டுத்தான் இந்த டீசர் மாலை ஆறு மணிக்கு பிரைம் டைமில் வெளியிட்டுள்ளனர் எதிர்பார்த்தது போலவே இந்த டீசர் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை புரிந்து வருவதால் இந்த டீசர் பலசாதனைகளை உடைக்கும் என கருதப்படுகிறது.