திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (23:24 IST)

ஒருசில மணி நேரத்தில் 6 லட்சம் லைக்ஸ்: மெர்சல் செய்த உலக சாதனை

அஜித் நடித்த விவேகம் திரைப்படத்தின் டீசர் ஸ்டார் வார்ஸ் படத்தின்  டீசர் லைக்ஸ்களை முறியடித்த உலக சாதனை பெரிதாக பேசப்பட்ட நிலையில் விஜய்யின் 'மெர்சல்' படத்தின் டீசர் வெறும் நான்கே மணி நேரத்தில் உலக சாதனையை தகர்த்துள்ளது.



 
 
மெர்சல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிய நிலையில் சுமார் நான்கு மணி நேரத்தில் 6 லட்சம் லைக்குகளை பெற்று அசத்தியுள்ளது. அனேகமாக இந்த சாதனையை முறியடிப்பது கடினம் என்றே கூறப்படுகிறது
 
அதே நேரத்தில் இந்த டீசருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்திற்கும் மேல் டிஸ்லைக்குகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் உலக சாதனை செய்த 'ஆளப்போறான் தமிழனை பாராட்டியே தீர வேண்டும்