செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (22:20 IST)

ரசிகர்களை மிரட்டிய மெர்சலுக்கு பாராட்டு தெரிவித்த பிரபலங்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவந்தவுடன் அவரது ரசிகர்கள் ஒரு தீபாவளியையே கொண்டாடிவிட்டனர். டீசர் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து இணையதளங்கள் அதிர தொடங்கின.



 
 
குறிப்பாக டுவிட்டரில் மெர்சல் குறித்த டுவீட்டுக்களால் உலக அளவிற்கு டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் இந்த டீசர் குறித்து கோலிவுட் பிரபலங்களின் கருத்துக்களை பார்ப்போமா!
 
சிவகார்த்திகேயன்: மெர்சல் டீசர் மிரட்டல்
 
ஸ்ரீதிவ்யா: நான் சமீபத்தில் பார்த்த டீசர்கள் மிகச்சிறந்த டீசர்களில் ஒன்று
 
இயக்குனர் மோகன் ராஜா: மீண்டும் நிரூபித்துள்ளார். விஜய்ன்னா மாஸ் இல்லை, மாஸ்ன்னாலே விஜய்தான்..
 
எஸ்.ஜே.சூர்யா: இன்னிக்கே தீபாவளி மாதிரி இருக்குது. அப்ப தீபாவளிக்கு?
 
நடிகர் சதீஷ்: தெறிக்குது தலைவா.
 
ஜி.வி.பிரகாஷ்குமார்: இளையதளபதி ராக்கிங்
 
விவேக் பாடலாசிரியர்: ஏ.ஆர்.ரஹ்மானின் வேற லெவல் இசை. 
 
பாடலாசிரியர் தாமரை: பாரம்பரியத்தை முன்னிறுத்தும் #மெர்சல் திரைப்பட முன்னோட்டத்தை கண்டு ரசித்தேன். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்