செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Modified: சனி, 11 நவம்பர் 2017 (18:47 IST)

தெலுங்கில் ‘மெர்சல்’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


 
 
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு ரிலீஸான படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘அதிரிந்தி’, சென்சார் பிரச்னையால் திட்டமிட்டபடி வெளியாக முடியவில்லை. ஒருவழியாக இந்த வாரம் ரிலீஸாகியிருக்கிறது.
 
இதுவரைக்கும் விஜய் படங்களுக்கு இல்லாத வகையில், 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘அதிரிந்தி’ வெளியாகியிருக்கிறது. இதற்கு முன் வெளியான ‘தெறி’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘பொலிச்சோடு’ அவ்வளவாக ஹிட்டாகவில்லை. ஆனால், ‘அதிரிந்தி’க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 
மத்திய அரசை விமர்சிக்கும் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.