செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:21 IST)

பிரபல தயாரிப்பாளர் அசோக்குமார் மரணம்; தீரன் படக்குழுவின் முடிவு

வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஹீரோவாகவும், ரகுல் ப்ரீத்சிங்  ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
'தீரன்' உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டது. இப்படத்தின் வெற்றியை கொண்டாட படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.  இந்நிலையில் கந்து வட்டி தொல்லை காரணமாக சினிமா தாயாரிப்பாளரும், நடிகர் சசிக்குமாரின் அத்தை மகனுமான அசோக்குமார் சென்னையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இவரின் இந்த தற்கொலை செய்தி சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கௌதம் மேனன் உள்பட  முன்னணி பிரபலங்கள் நிறைய பேர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாரிப்பாளரின்  அஷோக்குமார் மரணத்தால் இன்று வெற்றி விழா கொண்டாட இருந்த தீரன் அதிகாரம் ஒன்று படக்குழுவினர் நிகழ்ச்சியை ரத்து  செய்துள்ளனர்.