செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (13:44 IST)

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்?

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநிலை தவறியவர் என்பதை விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த மிரட்டலை விடுத்தது மரக்காணத்தைச் சேர்ந்த தினேஷ் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தினேஷ் மனநிலை சரியில்லாதவர். ஏற்கனவே இதே போல் ரஜினிகாந்தின் வீட்டிற்கும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது அவரது வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.