மன ரீதியாகப் பாதிப்பு ….இளம் கிரிக்கெட் வீரர் ஓய்வு…ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இளம் விளையாட்டு வீரரான முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர் அமீர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்தபோது, முகமது ஆசிப், சல்மான் பட் உள்ளிட்டோருடன் மேட்ச் பிக்ஸ் செய்தததாக முகமது அமீரும் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18. எனவே ஐசிசி முகமது அமிருக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதித்தது.
பின்னர் 2016 ஆம் ஆண்டு அணிக்கு முகமது திரும்பினார். இந்நிலையில் கடந்த வருடம் 27 வயதில் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்று முகமது அமிர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை மனரீதியாக நோகடிக்கிறார்கள். அதனால் என்னால் முடியாது. அதனால் நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.