வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 12 டிசம்பர் 2020 (17:03 IST)

மீரா மிதுன் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியீடு!

சர்ச்சைகளின் நாயகி மீரா மிதுன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை மிகவும் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்து சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சையில் சிக்கினார் மீரா மிதுன். இதற்கு எதிர்வினை ஆற்றும் சம்மந்தப்படட் நடிகர்களின் ரசிகர்களும் ஆபாசத்தை வாரி உமிழ்ந்து வருகின்றனர். இரு தரப்பும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்கிற ரீதியில் பேசி வருகின்றன. இந்நிலையில் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த அவர் இப்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளார்.

மீரா மிதுன் நடிக்கும் மிரா எனும் தமிழ் செல்வி எனும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டதுதான் அதற்குக் காரணம். இந்த போஸ்டரில் மீரா மிதுன் உடலெங்கும் கருப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கும் புகைப்படும் இணையத்தில் வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.