செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:31 IST)

காத்து வாக்குல ரெண்டு காதல்… சமந்தாவுக்காக இறங்கி வந்த விஜய் சேதுபதி!

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்காக விஜய் சேதுபதி தனது மற்ற படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நடிக்க சம்மதித்துள்ளாராம்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை எனக் கருதியதால் அவர் நடிக்க தயங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்துக்கு விக்னேஷ் சிவன் காட்சிகளை அதிகப்படுத்தினார். இந்நிலையில் இப்போது சமந்தா கர்ப்பமாக இருப்பதால் விரைவாக அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினால் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதனால் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி மற்ற படங்களை தள்ளி வைத்துவிட்டு இப்போது இந்த படத்துக்காக நடிக்க தேதிகள் கொடுத்துள்ளார். உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு அதன் பின்னர் நயன்தாரா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.