புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (11:28 IST)

பல வருடங்களுக்குப் பிறகு ரி எண்ட்ரி கொடுக்கும் முன்னணி நடிகை!

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்தவர் மீரா ஜாஸ்மின்.

தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் முழுவதும் நடிப்பில் ஆர்வம் செலுத்த உள்ளார். இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கும் புதிய படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். அதன் பின்னர் மற்ற மொழிகளிலும் அவர் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.