செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (18:45 IST)

மீராமிதுன் இயக்கி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு!

மீராமிதுன் இயக்கி நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு!
நடிகையும் மாடலுமான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து சர்ச்சைக்குரியவராக இருந்தார். அது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து விட்டு வெளியே வந்த பின்னரும் ரஜினிகாந்த் விஜய் உள்பட பல பிரபலங்கள் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் சூர்யா விஜய் குடும்பத்தினரையும் அவர் இழுத்தது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது
 
இந்த நிலையில் தற்போது தான் நடித்து இயக்கும் திரைப்படம் குறித்த தகவலை மீராமிதுன் வெளியிட்டுள்ளார். ’மீரா என்ற தமிழரசி’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது அவரது உண்மைக்கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
இந்த படம் குறித்து டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: இத்திரைப்படம் மூலம் தான் ஒரு பிரபலம் என்று பீத்திக்கொள்ளும் பலரின் முகத்திரை கிழிக்கப்படும்... உண்மை ஒருபோதும் தோற்ப்பதில்லை என்னை தவறான கண்ணோட்டத்தில் மக்களுக்கு காட்டிய மீடியாக்களுக்கு இப்படம் ஒரு பாடமாக அமையும்... என்று குறிப்பிட்டுள்ளார்.