மீராவின் இன்றைய டார்கெட் கவின்!

Last Modified செவ்வாய், 16 ஜூலை 2019 (09:18 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா வெளியேறியவுடன் 'அப்பாடா நிம்மதி' என்று மற்ற போட்டியாளர்கள் நினைத்த நிலையில் வனிதாவின் வேலையை நான் பார்க்கின்றேன்' என்று மீரா மற்ற போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக உள்ளார். தினமும் ஒருவரிடம் பிரச்சனை செய்து தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று குறியாக இருக்கும் மீராவிடம் இதுவரை சிக்கியவர்கள் பட்டியலில் வனிதா, அபிராமி, மதுமிதா, தர்ஷன், லாஸ்லியா, சேரன் ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இன்று அவரிடம் கவின் சிக்கியுள்ளார்.
இன்றைய டாஸ்க் ஒன்றில் மீரா விளையாடிய விதம் குறித்து கவின் ஒரு கமெண்ட் அடிக்க, கவினை காய்ச்சி எடுக்கின்றார் மீரா. நான் மட்டும் தான் தவறு செய்வது போல் எல்லோரும் எப்படி சொல்றிங்க என்று எகிற, பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பாத கவின், மீராவிடம் சாரி கேட்டார்.

ஆனாலும் சாரி கேட்ட பின்னரும் ஒருவரின் மனதை புண்படுத்திவிட்டு சாரி கேட்டால் சரியாகிவிடுமா? என்று மீண்டும் எகிற, கவினுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வழக்கம்போல் மற்ற போட்டியாளர்கள் இந்த சண்டையை வேடிக்கை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :