புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (16:04 IST)

ஐ லவ் யூ சொன்ன அபிராமி - வெட்கப்பட்டு சிரித்த முகன்..!

முகனுக்கு பலர் முன்னிலையில் ஐ லவ் யூ சொன்ன அபிராமி, வெட்கப்பட்டு தலைகுனிந்த முகன். 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. இதில் பிக்பாஸ்,  போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதாவது. நீங்கள் யாருடன் இருந்தால் நீரம் போவதே தெரியாது என்று கேட்க அதற்கு ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்கின்றனர். 
 
முதலாவது நபராக முகன்,  தனக்கு அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியுது என்று சொலிக்கிறார். அதை கேட்ட அபிராமி புன்னகைக்கிறார். பின்னர் அபிராமி, முகன் எனக்கு ஒரு நல்ல நம்பிக்கையுள்ள நண்பனாக நீ கிடைத்திருக்கிறாய். 
 
என்னுடைய சந்தோஷம் , துக்கம் அனைத்தயும் நான் உன்னுடன் நிறைய பகிர்ந்துள்ளேன். நீ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனாக எனக்கு தோல் கொடுத்திருக்கிறாய் என்று கூறிக்கொண்டிருக்கும்போதே சடாலென்று  "ஐ லவ் யூ முகன் " என பலர் முன்னிலையில் சொல்லிவிட்டார் அபிராபி. இதனை கேட்ட முகன் வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கிறார். 
 
இவர்களின் இந்த நட்பு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் தொடர வாழ்த்துக்கள் என பலரும் கூறிவருகின்றனர்.