ஞாயிறு, 7 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2025 (08:06 IST)

4 மாதங்களில் முடிவுக்கு வரும் எஸ்.வி.சேகர் டிவி தொடர்.. மக்களிடம் வரவேற்பு இல்லையா?

4 மாதங்களில் முடிவுக்கு வரும் எஸ்.வி.சேகர் டிவி தொடர்.. மக்களிடம் வரவேற்பு இல்லையா?
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எஸ்வி சேகரின் 'மீனாட்சி சுந்தரம்' என்ற தொலைக்காட்சி தொடர், மிகக் குறுகிய காலத்திலேயே முடிவடைய உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், இந்த வார இறுதியில், அதாவது ஆகஸ்ட் 23 அன்று அதன் இறுதி அத்தியாயத்தை ஒளிபரப்ப உள்ளது.
 
இந்த தொடரில் நடிகர் எஸ்.வி. சேகர், நடிகை ஷோபனாவுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். 76 வயதான எஸ்.வி. சேகர், 26 வயதான ஷோபனாவை திருமணம் செய்யும் கதைக்களம், பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
 
எனவே தான் நான்கு மாதங்களுக்குள்ளேயே இந்தத் தொடர் முடிவடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சிகளுடன் தொடர் முடிவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva