திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:06 IST)

ரஜினி பிறந்தநாளில் ரசிகர்கள் மருத்துவ முகாம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் ரத்த தானத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்குப் பின்,  தற்போது, நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடிக்கும் முன்பே லைகா நிறுவனத்திற்கு 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தற்போது லால்சலாம் என்ற படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷாலுடன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாள் வரவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இதைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி, டிசம்பர் 11 ஆம் தேதி சென்னை வளசரவாக்கத்தில், மருத்துவ முகாம் அமைத்து,  ரத்த தானம் கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj