''அநீதி'' பட திகட்ட திகட்ட பாடலை ரிலீஸ் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள அநீதி படத்தின் திகட்ட திகட்ட பாலை இன்று ஏ.ஆர்.ரஹ்மான் ரிலீஸ் செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அநீதி. இப்படத்தை அர்பன் பாய்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில், கைதி, மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்த நடிகர் அர்ஜூன் – சாஷா அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில், இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட என்ற பாடலை இன்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்பாடலை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் எழுதியது குறிப்பிடத்தக்கது.