1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (19:28 IST)

ரஜினியின் ''ஜெயிலர் ''படம் பற்றிய முக்கிய தகவல் !

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும்ஜெயிலர் படத்தின் முக்கிய தகவல் வெளியாகிறது.

அண்ணாத்த படத்திற்குப் பின், ரஜினிகாந்த் நடிப்பில்,  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர்”படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை தவிர மேலும் சில நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில்,  இந்த படத்தின் ஷூட்டிங் கடலூருக்கு அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ரஜினியின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியயாகி வைரலானது.

 
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.



இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஸ்டண்ட் மாஸ்ட்டர் சிவா கூறியதாவது: இப்படத்தில் மொத்தம் 7 சண்டைக் காட்சிகள் முடிந்துள்ளதாகவும், இவை அனைத்தும் சிறப்பாக வந்துள்ளதாகவும், ரசிகர்களுக்கு பிடித்தமானதாக ஆக்சன் காட்சிகளாக  இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.