திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By VM
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (13:25 IST)

கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக அவரது மனைவியை சுட்டுக்கொன்ற பாலிவுட் நடிகை

டெல்லியின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்தவர் மன்ஜீத். இவருக்கு திருமணமாகி சுனிதா என்ற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும்  உள்ளனர். சுனிதா அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.
 
26 வயதாகும் பாலிவுட் நடிகை ஏஞ்சல் குப்தா. இவர் பி கிரேட் வகை பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் மன்ஜீத்துக்கும்  இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் ஒரு நாள் சுனிதாவிற்கு தெரியவந்ததையடுத்து, மன்ஜீத்தை கண்டித்துள்ளார். 
 
எனினும் கள்ளக்காதலை இருவரும் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் மன்ஜீத் தனது மனைவிக்கு விவாகரத்து தர விரும்பியுள்ளார். ஆனால் அவரது மனைவி விவகாரத்துக்கு மறுத்துவிட்டார்.
 
இதனால், ஆத்திரமடைந்த மன்ஜீத் தனது கள்ளக்காதலி ஏஞ்சல் குப்தாவுடன் இணைந்து தனது மனைவியை கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து மன்ஜீத், ஏஞ்சல் குப்தா மற்றும் மன்ஜித் குப்தாவின் வளர்ப்பு தந்தை ராஜீவ் ஆகிய மூவரும் இணைந்து பள்ளிக்குச் சென்ற சுனிதாவை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.