1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (16:29 IST)

விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் நகைச்சுவை நடிகர்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி போட்டியிட உள்ளாராம்.

நடிகர் மயில்சாமி தீவிரமாக அரசியல் பேசக்கூடியவர். ஜெயலலிதா இருந்தவரை அவர் அதிமுக ஆதரவாளராக இருந்தார். அதற்கு முக்கியக் காரணம் அவர் தீவிர எம் ஜி ஆர் ரசிகர். ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் பாஜகவின் கைப்பாவை போல செயல்படுவது ஆகியவற்றால் தனது அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் தான் வசிக்கும் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ளாராம்.