திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (11:58 IST)

தீபாவளியோ பொங்கலோ ’மாஸ்டர்’ தியேட்டரில் தான்!!

மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். 
 
மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை. வரும் தீபாவளியோ அல்லது அடுத்த ஆண்டு பொங்கலோ ஆனால் மாஸ்டர் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
விஜய்க்கும் படத்தை OTT தளத்தில் வெளியிட விருப்பமில்லை என காத்திருந்து திரையில் வெளியிடுமாறு கூறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் கொரோனா முடிவும் வரை மாஸ்டருக்காக காத்திருக்க வேண்டும்.