செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:53 IST)

பாக்ஸ் ஆபிஸில் ‘’வசூல் ஜாம்பாவான்’’ ஆன ’’மாஸ்டர் விஜய்’’ !

பொங்கலுக்கு உலகமெங்கும் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் ஒரு வாரம் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது மேலும் பல சாதனை படைத்துள்ளது மாஸ்டர் படம்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் கேரியரில் இப்படமும் முக்கியப் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு இணையாக விஜய்யின் படங்கள் வசூலை வாரிக்குவிப்பதால் மாஸ்டர் அங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது.

தெலுங்கிலும் ஹிந்தியிலும் விஜய்யின் நேரடி டப்பிங் படமான மாஸ்டர் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல்  ரீதியாகவும் பெரும்  வெற்றி பெற்றுள்ளதால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் மாஸ்டர் படம் ரிலிஸான பத்து நாளில்’ சுமார் ரூ. 200 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இதனால் மொத்தப் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. அதேபோல் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியானால் அங்கும் மிகப்பெரிய சாதனை நிகழ்த்தலாம் எனத் தெரிகிறது.