வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (16:20 IST)

மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் எப்போது … ரசிகர்களுக்கு உற்சாகமான தகவல்!

மாஸ்டர் படத்தின் டிரைலர் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டுக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்த படத்தின் சென்சார் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதையடுத்து படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்வது உறுதி என்று சொல்லப்படுகிறது. அதனால் படத்தின் டிரைலர் எப்படியும் கிறிஸ்துமஸ் அல்லது ஆங்கில புத்தாண்டுக்கு ரிலீஸாகும் என சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.