20 நிமிடத்துக்கு மேல் ஒரு காரில் செல்ல முடியாத நடிகர் – இப்படி ஒரு பிரச்சனையா?
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆறு விதவிதமான பொசிஷனில் உட்காரும் விதமாக ஆறு கார்களை வாங்கியுள்ளார்.
நடிகர் ஹ்ருத்திக் ரோஷன் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். பாலிவுட்டில் முதல் படத்திலேயே வெற்றியை சுவைத்தவர் ஹ்ருத்திக் ரோஷன். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவர் வெற்றியும் தோல்வியுமாக தனது சினிமா பயணத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த சூப்பர் 30 என்ற திரைப்படம் கவனத்தை ஈர்த்தது.
வெற்றி தோல்வி இருந்தாலும் ஹ்ருத்திக் ரோஷன் தனது உடலை மெயிண்டெய்ன் செய்வதில் மிகவும் கவனமாக இருக்கும் நடிகர். ஆனால் அவருக்கு சிறு வயதில் ஸ்கோலியோசிஸ் எனும் நோய் வந்துள்ளது. ஸ்கோலியோசிஸ் நோய் என்பது மனிதனின் முதுகுத் தண்டு வளைவு மற்றும் தோள்பட்டை ஒரு பக்கமாக சாய்வதற்கு இந்த நோய் ஒரு முக்கிய காரணமாகும். ஆனாலும் உடல்பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் அதை வென்றுள்ளார். ஆனாலும் அவரால் இப்போது கூட காரில் பயணம் செய்யும் போது 20 நிமிடத்துக்கு மேல் ஒரு பொசிஷனில் உட்கார முடியாதாம். அதனால் ஆறு வெவ்வேறு விதமான பொசிஷனில் உடகாருவதற்காக 6 வெவ்வேறு கார்களை வாங்கியுள்ளாராம். நீண்ட பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த ஆறு கார்களையும் எடுத்து சென்று அதில் மாறி மாறி செல்வாராம்.