1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (07:44 IST)

தீவிர கண்காணிப்பில் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 2800 பேர்: அமைச்சர் தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்னும் பொதுமக்கள் முழுமையாக மீண்டு வராத நிலையில் திடீரென மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பிரிட்டனில் தோன்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து பிரிட்டனை தனிமைப்படுத்த உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. பிரிட்டனுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது என்பதும், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களையும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் பிரிட்டனில் இருந்து திரும்பிய 2,800 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா பற்றி அச்சம் அடைய தேவையில்லை என்றும் பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய 7 பேருக்கு புதிய புதிய வகை கொரோனா இருக்கிறதா என கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் பிரிட்டனில் இருந்து திருவள்ளூர் திரும்பிய 80 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் 80 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என அம்மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் அளித்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் 
 
அதேபோல் பிரிட்டனிலிருந்து உதகை திரும்பிய யாருக்கும் இதுவரை கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவருமே கண்காணிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது