1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2020 (09:33 IST)

இந்த முறையாவது அவரை கவர முயல்வேன் – தனுஷ் டிவீட்!

நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் தனுஷும் செல்வராகவனும் தமிழ் சினிமாவின் ஹிட் காம்போ. அவர்கள் இருவரும் கடைசியாக மயக்கம் என்ன படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு  8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் தனுஷ். இந்த 8 ஆண்டுகாலத்தில் செல்வராகவன் இயக்கிய எந்த படமும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது கர்ணன் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய படங்களை முடித்துள்ள தனுஷ் மார்ச் மாதத்தில் செல்வராகவன் படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தனது ஹிட் கூட்டணியான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோரோடு கூட்டணி அமைத்துள்ளார். இது சம்மந்தமாக செல்வராகவன் நேற்று டிவிட்டரில் அறிவிப்பை வெளியிட்டார். அதையடுத்து நடிகர் தனுஷ் ‘செல்வராகவன்+யுவன் ஷங்கர் ராஜா + அரவிந்த் கிருஷ்ணா கூட்டணி. நான் எங்கு ஆரம்பித்தேனோ அங்கேயே வந்திருக்கிறேன். என்னை உருவாக்கிய என் அண்ணன் இயக்குனர் செல்வராகவனோடு இணைவது மகிழ்ச்சி. இந்த முறையாவது அவரை கவர முயல்வேன்’ எனக் கூறியுள்ளார்.