வைரலாகும் "மாஸ்டர்" ஆடியோ லான்ச் அழைப்பிதழ்....!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மாஸ்டர்”. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக், மற்றும் தர்டு லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அத்துடன் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் என்ற முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.
அடுத்ததாக படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மிகுந்த ஆராவதுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி கிடைத்துள்ளது. அதாவது, வருகிற ஞாயிற்று கிழமை நடைபெறவிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.