மீண்டும் விஜய் வீட்டில் ஐடி ரெய்டு - கடும் கோபத்தில் ரசிகர்கள்!

papiksha| Last Updated: வியாழன், 12 மார்ச் 2020 (13:01 IST)

பிகில் விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தினர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த படத்தின் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்கள், விஜய் வீடு உள்பட மொத்தம் 38 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டு நாட்களாக கிடு பிடி சோதனை நடத்தினார்கள்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அந்த சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை கொண்டு தீவிரமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகி வரும் நிலையில் மீண்டும் இப்படி நடந்திருப்பது விஜய் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து சீண்டுவதாக சமூகவலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :