வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (12:21 IST)

சர்வதேச பெண் பிரபலத்துடன் இணைந்த மாதவன்: புதிய தகவல்

சர்வதேச பெண் பிரபலத்துடன் இணைந்த மாதவன்
சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கி வருபவர் மேரி ஹாக்ஸ். இவர் பாடிய பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல் முறையாக இவர் ஒரு தமிழ் படத்தில் பாடி உள்ளார். மாதவன் நடித்து இயக்கும் ராக்கெட்டரி’ என்ற படத்தில்தான் இவர் ஒரு பாடலை சாம் சிஎஸ் இசையில் பாடியுள்ளார் என்பதும், இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த பாடல் மிக சிறப்பாக வந்துள்ளதாகவும் மாதவன் தனது சமூக வலை பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மாதவன் சிம்ரன், சூர்யா, ஷாருக்கான் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு  சிர்ஷா ராய் ஒளிப்பதிவும், பிஜித் பாலா படத்தொகுப்பும் செய்துள்ளனர். தமிழ் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது