வேற லெவலில் தயாராகும் மாநாடு படத்தின் பாடல்கள் - மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பளார்
நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் வழக்கம்போல் படக்குழுவினர்களுக்கு ஒத்துழைப்பு தர சிம்பு அடம்பிடித்ததால் இந்த படம் கிட்டத்தட்ட டிராப் ஆனதாக செய்திகள் வெளிவந்தது.
இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து சிம்புவின் தாயார் கொடுத்த உறுதி மொழியை ஏற்று 'மாநாடு' படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவு செய்தார். அதையடுத்து சமீபத்தில் தான் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய தொடந்து சிம்பு மாநாடு பாத்தில் நடித்து வருகிறார்
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க பாரதிராஜா, எஸ். ஏ சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடையும்படி ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். " மாநாடு படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா சிறந்த இசையை தந்துள்ளார் என கூறியுள்ளார்.