1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (19:15 IST)

புதுவித இலையோடும்... சங்கத்தலைவன் படத்தின் முதல் லிரிக் பாடல் வீடியோ இதோ !

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம் தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது.
 
வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சமுத்திர கனியுடன் விஜே ரம்யா, சுனு லக்ஷ்மி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். போராட்டம், அரசாங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ள இப்படத்தை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர் தனுஷின் அசுரன் பட கதையை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சற்று முன் இப்படத்தின் முதல் லிரிகள் வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. புது வித இலையோடும் என துவங்கும் இனிமையான இந்த மெலடி பாடல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்தோ அந்த பாடல் வீடியோ...