திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (16:22 IST)

நடிகை அதிதிராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்!

sathyadeep  missra - masaba gupata
மணிரத்னம் பட நடிகை அதிதிராவின் முன்னாள் கணவர்  நடிகர் சத்யதீப்  மிஸ்ராவுக்கு 2 வது திருமணம் நடைபெற்றுள்ளது.
 

தமிழ் சினிமாவில்,  இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதிராவ்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்  நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து  பெற்றனர்.

இந்த நிலையில், நடிகர் சத்யதீப் மிஸ்ராவுக்கும் , இந்தி நடிகை மசாபா குப்தாவுக்கும்  திருமணம்  நடந்துள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு சினிமா  நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

நடிகை மசாபா குப்தா தயாரிப்பாளர் மண்டோவை திருமணம் செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.  

 நடிகை மசாபா குப்தா,  நடிகை மீனா குப்தா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பாவான் விவியன் ரிச்சர்ஸ்ட் தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.