செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (19:37 IST)

''மார்க் ஆண்டனி சூப்பர் டூப்பர்''....விஜய் பட இயக்குனர் வாழ்த்து

Mark antony
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்  இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா  நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் மார்க் ஆண்டனி.

இப்படத்தில் நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து,  சுனில்,  நிழல்கள் ரவி,  செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

டைம் டிராவல் பற்றிய இப்படம் பெரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தியேட்டரில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு, மார்க் ஆண்டனி பற்றி நல்ல செய்திகள் வருகிறது. விஷால், எஸ்.ஜே.சூர்யாவை  நினைத்து மகிழ்ச்சி….மார்க் ஆண்டனி படம் சூப்பர், டூப்பர் ….மொத்த படக்குழுவுக்கு  வாழ்த்துகள்…என்று தெரிவித்துள்ளார்.

‘லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தனர். இதில் விஷாலின் வங்கி கணக்கு விவரங்களை சமர்பிக்க கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “மார்க் ஆண்டனி” படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது’ குறிப்பிடத்தக்கது.