திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:31 IST)

''மர்லின் மன்றோ ''வாழ்க்கை படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

marilyn monroe
ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர் மர்லின் மன்றோ. அவரது வாழ்க்கை வரலாறு படம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் மர்லின் மன்றோ. இவர்,ஜென்டில்மென் பிரீபெர் பிளான்ட்ஸ், சம் லைக் இட் ஹாட், தி செவன் இயர் இட்ச், தி மிஸ் ஃபிட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அன்றைய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த மர்லின் மன்றோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், அவர் பீக்கில் இருக்குபோதே,  தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

ஏற்கனவே சில முறை இவரின் வாழ்கைக் கதை ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை blonde என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான அனா டி ஆர்மாஸ் மர்லின் மன்றோ வேடத்தில் நடித்துள்ளார்.

நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது சமீபத்தில் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 23  ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.