வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 9 நவம்பர் 2022 (14:38 IST)

'துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்

thunivu vs varisu
அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஆகிய இரண்டும் பொங்கல் திருநாளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க முடியாது என்று கூறியுள்ளார். 
 
அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் சமமாகவே தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்றும் இதற்கு முன்னர் இது போன்று இரண்டு பெரிய படங்கள் வெளியான போதும் அவ்வாறுதான் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்ததுஎன்றும் கூறினார்
 
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran