1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (09:18 IST)

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத் தலைவன்… டீசர் ரிலீஸ் அப்டேட்!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கலகத்தலைவன் படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவரின் அடுத்த ரிலீஸாக மகிழ் திருமேனி திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றிய தகவல் ஒன்று இப்போது திரைவட்டாரத்தில் பரவி வருகிறது.

இந்த படத்துக்கு கலகத்தலைவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதியின் அடுத்த பட ரிலீஸாக இந்த படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.