வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:15 IST)

'மாரி 2' பீர் ஊற்றி அபிஷேகம் செய்த ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள 'மாரி 2' படத்தின் பேனருக்கு பீர் ஊற்றி ரசிகர்கள் அபிஷேகம் செய்துள்ளனர்.


 
தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர், நடிகர் கிருஷ்ணா, மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரது   நடிப்பில் இன்று  'மாரி 2' படம் இன்று வெளியாகி உள்ளது. தனுஷ் ரசிகர்கள் இந்த பட வெளியீட்டை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 
 
சிறப்பு காட்சி அதிகாலை 5 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் திரையிடப்பட்டது. இக்காட்சியைக் காண  ஏராளமான தனுஷ் ரசிகர்கள் வந்திருந்தனர். 
 
முன்னதாக அதிகாலை 3 மணி முதல் திரையரங்கு முன்பு தோரணம், கட்டவுட், பட்டாசு, வான வேடிக்கையோடு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பீர் ஊற்றி மாரி 2 படத்தின் கட்டவுட்டுக்கு அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 5 மணி அளவில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 
 
இந்தக் காட்சியை நடிகை சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் ரசிகர்களோடு கண்டுகளித்தனர்.