புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (19:53 IST)

யுவன் சங்கர் ராஜா இல்லைனா எங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் : தனுஷ் ‘’பிளாஷ்பேக்’’

டிசம்பர் 21 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் மாரி 2 படத்தின் பிரஸ் மீட் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
 
தனுஷ், சாய் பல்லவி,வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பாலாஜி
மோகன் இப்படத்தை இயக்கி உள்ளார்.
 
அப்போது பத்திக்கையாளர் சந்திப்பில் தனுஷ் கூறியதாவது :
 
என் முதல் படமான துள்ளுவதோ இளமையின் போது அன்ணன் செல்வராகவனும் யுவனும்தான் நெருக்கமானவர்கள். ஏராளமான புதுமுகங்கள் நடித்த அப்படத்திற்கு அடையாளம் கொடுத்தது யுவன் சங்கர் ராஜாவின்  மியூசிக் தான். அப்படம் வெற்றியடையாமல் இருந்தால் நானும் எங்கள் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்திருப்போம். அப்படம் யுவனின் இசையால்தான் வெற்றி பெற்றது.அ தனால் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.இப்போது அவர் அஜித் படத்திற்கு இசையமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 
 
மேலும், மாரி 2 ஒரு கமர்ஷியல் படம். இப்படத்தில் சாய் பல்லவி கிளிசரின் இல்லாமலேயே அழுவார். இப்படத்திற்கு கிடைக்கும்  வரவேற்பை பொறுத்து மாரி 3 எடுக்க திட்டமிடுவோம். வரும் 21 ஆம் தேதி ரிலீசாக உள்ள விஜய் சேதுபதியின் சீதக்காதி, சிவகார்த்திகேயனின்  கனா,உட்பட இந்த வாரம் ரிலீசாகும் அத்தனை படங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள் .இவ்வாறு தெரிவித்தார்.