திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (18:05 IST)

ரஜினியை விட அதிக சம்பளம் கேட்ட கமல்: ஷாக்கான ஷங்கர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 2.0 திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது. 
 
ஏற்கனவே, 2.0 படத்தில் அக்‌ஷ்ய குமார் ஏற்று நடித்த பட்ஷிராஜன் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க இருந்தார் என்ற செய்தி வெளியானது. அதாவது, ஷங்கரும் எழுத்தாளர் ஜெயமோகனும் 2.0 கதையை எழுத ஆரம்பித்த போதே அந்த கதாபாத்திரத்திறகு கமலை மனதில் வைத்தே எழுதியுள்ளனர் என்றும் தகவ்ல் தெரிவித்தன. 
 
சம்பளம் மற்றும் கால்ஷீட் பிரச்ச்னைகளால் 2.0 படத்தில் கமல் நடிக்கவில்லை என்ற காரணமும் வெளியாகின. கமல் படத்தில் நடிக்காமல் போனதற்கு சம்பள பிரச்சனைதான் காரணம் என உறுதிப்படுத்தும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
ஆம், இப்படத்தில் நான் நடிக்க வேண்டுமானால் ரஜினியின் சம்பளத்தை விட எனக்கு அதிகமாக சம்பளம் தர வேண்டும் என கமல் கேட்டாராம். அதன்பின்பே அக்‌ஷய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். 
 
இருப்பினும் அக்‌ஷ்யகுமார் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ரஜினிக்கு நிகராக அவரது கதாபாத்திரம் பாராட்டப்படும் அளவிற்கு நடித்திருந்தார் அக்‌ஷய குமார்.