வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (07:52 IST)

2.0 படத்தின் 4 நாட்கள் சென்னை வசூல் விபரம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த '2.0' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நான்கு நாட்கள் சென்னை வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

இதன்படி நான்கு நாட்களில் இந்த படம் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாள் வியாழன் அன்று ரூ.2.64 கோடியும், இரண்டாம் நாள் வெள்ளியன்று ரூ.2.13 கோடியும், மூன்றாம் நாள் சனி மற்றும் ஞாயிறு முறையே ரூ.2.57 கோடி, ரூ.2.75 கோடி என மொத்தம் ரூ.10.09 கோடி வசூல் செய்துள்ளது.

இருப்பினும் இந்த படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது இந்த வசூல் குறைவுதான் என்றும், இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே இந்த படம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றதா? என்பதை கூற முடியும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தமிழகம் முழுவதும் சொந்தமாக ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.