செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 டிசம்பர் 2018 (10:48 IST)

வடசென்னைப் பானியில் பேட்ட புரோமோஷன் – பேட்டப் பராக்!

பேட்டப் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதை அடுத்து இப்போதில் இருந்தே அதன் விளம்பர வேலைகளை ஆரம்பித்து விட்டது சன்பிக்சர்ஸ் நிறுவனம்.

பேட்டப் படத்தில் ரஜினியுடன் இணைந்து விஜய்சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், மகேந்திரன் என பலர் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அவர்களின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதமாக தற்போது போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை ரஜினியின் வெவ்வேறு தோற்றங்களைக் கொண்ட போஸ்டர்கள் மட்டுமே வெளியான நிலையில் தற்போது முதல் முறையாக விஜய்சேதுபதியின் புகைப்படத்தோடு கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது. துப்பாக்கியோடு ஆக்ரோஷமாக அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதிக்குப் பின்னால் ரஜினி சில்ஹவுட்டில் நடந்து வருவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து எனவும் போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடசென்னைப் படத்திலும் இதுபோன்ற அதிக நடிகர்கள் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் ஓவ்வொரு நடிகர்களின் பெயர்களோடு கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனவே பேட்டப் படத்திற்கும் அது போலவே புரோமோஷன்களை படக்குழு செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது

விஜய் சேதுஅபதியை அடுத்து நவாசுதீன் சித்திக், சசிக்குமார், பாபி, சிம்ரன், திரிஷா போன்றோருக்கும் இதைப் போன்ற போஸ்டர்கள் வரிசையாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.