புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:04 IST)

ஹிப் ஹாப் ஆதி படத்தில் இருந்து விலகிய அல்போன்ஸ் புத்திரன் – புது இயக்குனர் இவரா?

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தை மரகதநாணயம் இயக்குனர் சரவணன் இயக்க உள்ளார்.

இசையமைப்பாளராகவும் பாடகராகவும் இருந்த ஆதியை ஹீரோவாக வைத்து சுந்தர் சி மீசைய முறுக்கு, நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஆதியே இயக்கினார். இதில் கடைசியாக உருவான நான் சிரித்தால் படத்தின் படப்பிடிப்பின் போது சுந்தர் சிக்கும் ஆதிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனது அடுத்தடுத்த படங்களுக்கு ஹிப் ஹாப் ஆதியை விடுத்து வேறு சில இசையமைப்பாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் தயாரிப்பாளரான சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படத்தை முதலில் நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இசையமைத்து இயக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிடவே அவருக்குப் பதிலாக மரகத நாணயம் திரைப்படத்தை இயக்கிய ஏ ஆர் கே சரவணன் இயக்க உள்ளார்.