வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (11:51 IST)

நயன்தாரா இல்லன்னா அஞ்சலி… யோகி பாபு நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!

அஞ்சலி நடிக்கும் பேய் படத்தில் அவரை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபுதான். அந்த அளவுக்கு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் அடுத்து நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஞ்சலி பேயாக நடிக்க அவரை உருகி உருகி காதலிக்கும் நபராக யோகி பாபு நடிக்கிறாராம். இந்த படத்தை கிருஷ்ணன் ஜெயராம் என்பவர் இயக்கி வருகிறார்.