செவ்வாய், 9 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (08:19 IST)

யோஹன் படத்தை விஜய் நிராகரித்தது ஏன்?... ஒளிப்பதிவாளர் சொன்ன விளக்கம்!

2012 ஆம் ஆண்டு விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படப்பாணியில் பிரமாண்டமாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கப் போவதாக கௌதம் தெ‌ரிவித்திருந்தார். இந்த படத்தை கௌதம் மேனனே தயாரிப்பதாகவும் இருந்தது.

போஸ்டரில் விஜய் இடம்பெற்ற விளம்பரங்கள் பத்தி‌ரிகைகளில் வெளிவந்தன. துப்பாக்கிப் படத்துக்குப் பிறகு யோஹன் தொடங்கப்படும், இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பதுவரை முடிவாகியிருந்தது. ஆனால் அந்த படம் தொடங்கப்படாமலே கைவிடப்பட்டது.

இந்நிலையில் அந்த படம் ஏன் கைவிடப்பட்டது என ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியுள்ளார். அதில் “அவர்கள் இருவருக்கும் இடைடே மீட்டிங் ஏற்பாடு செய்ததே நான்தான். கௌதம் மேனன் விஜய் சார்க்கு கதையை நரேட் செய்தார். ஆனால் படத்தில் ஒரு இடத்தில் கூட தமிழ் வசனமே இல்லை என்பதால் விஜய் சார் தயங்கினார். அதனால்தான் அப்போது அந்த படம் கைவிடப்பட்டது” எனக் கூறியுள்ளார்.