1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Lokesh talked about kaidhi 2 and rolex

முதலில் கைதி 2 அப்புறம் ரோலக்ஸ்… ஜப்பான் மேடையில் லோகேஷ் பகிர்ந்த தகவல்!

லியோ
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்த விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகி இதுவரை 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தின் இரண்டாம் பாதியை லோகேஷ் சரியாக எடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஜப்பான் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லோகேஷிடம் கைதி 2 எப்போது வரும் ரோலக்ஸ் படம் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் “முதலில் கைதி 2 வரும். அதன் பின்னர்தான் ரோலக்ஸ் படம் வரும்” எனக் கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
தாய்லாந்துக்கு பறக்கும் தளபதி 68 படக்குழு!