செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (13:15 IST)

மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி வசூல் படம்.. மம்முட்டி, மோகன்லால் செய்யாத சாதனை..!

மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் கூட செய்யாத 200 கோடி ரூபாய் வசூல் சாதனை வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற படம் வசூல் சாதனை செய்துள்ளது மலையாள திரை உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. 
 
கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் மலையாளத்தில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி வெளியான நிலையில் இந்த படம் கேரளாவில் சூப்பர் ஹிட் ஆனது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் கமல்ஹாசனின் ’குணா’ படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் இருந்ததை அடுத்து தமிழ்நாட்டில் இந்த படம் பிரபலமானது. 
 
ஒரு கட்டத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பட குழுவினர் கமல்ஹாசனை சந்தித்தது குறித்த தகவல் வெளியான நிலையில் பலர் இந்த படத்தை பார்க்க ஆரம்பித்தனர் என்பது தமிழில் டப் செய்யாமல் மலையாளத்திலேயே வெளியான இந்த படத்தை இளைஞர்கள் மட்டும் இன்றி குடும்ப ஆடியன்ஸ்களும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று 200 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த படம் பெரும் சாதனை செய்துள்ளது. இதனை அடுத்து மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது மட்டுமின்றி மம்முட்டி மோகன்லால் படங்கள் கூட செய்யாத சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்து உள்ளது என்பது மலையாள திரை உலகிற்கே பெருமைப்படக்கூடியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran