வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (10:15 IST)

4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பரிசு வழங்கிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!

Infosys
இன்போசிஸ் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு 240 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை பரிசாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தி தம்பதிகளுக்கு அக்ஷதா மற்றும் அபர்ணா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் அக்ஷதா என்பவர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவி என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்னொரு மகளான அபர்ணாவுக்கு கடந்த நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி தனக்குரிய 15 லட்சம் இன்போசிஸ் பங்குகள் பரிசாக வழங்கியுள்ளார். இதன் சந்தை மதிப்பு தற்போது 240 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

 நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 5000 கோடி மதிப்புள்ள பங்குகள் இருப்பதாகவும் அவரும் விரைவில் தனது 4 மாத பேரனுக்கு மிகப்பெரிய பரிசை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி வழங்கிய பரிசு காரணமாக நான்கு மாத குழந்தை 240 கோடிக்கு சொந்தமான கோடீஸ்வரர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran