திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (11:06 IST)

இப்பதான் லைசென்ஸ் வாங்குறீங்களா? அப்ப அஜித் கூட போனது..? – சர்ச்சையில் சிக்கிய மஞ்சு வாரியர்!

Manju Warrier
பிரபல நடிகை மஞ்சு வாரியர் லைசென்ஸ் பெற்றதாக வெளியாகியுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அஜித்துடன் துணிவு படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார் மஞ்சு வாரியர்.

சமீபத்தில் மஞ்சு வாரியர் எர்ணாக்குளம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் 8 போட்டுக் காட்டி லைசென்ஸ் பெற்றதாக செய்தியும் அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அடுத்து மஞ்சு வாரியர் பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்க போவதாகவும், அஜித்துடன் லாங் ட்ரிப் ஒன்று செல்ல உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.


ஆனால் இதற்கு முன்னரே துணிவு படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் அஜித் குமாருடன், மஞ்சு வாரியர் லடாக் வரை பைக்கில் பயணம் செய்திருந்தார். அப்போது அவர் பைக்கை ஓட்டுவது போன்ற சில புகைப்படங்களும் வெளியானது. அதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள் சிலர் “இப்போதுதான் லைசென்ஸ் வாங்கிறார் என்றால், லடாக் வரை லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினாரா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லடாக் வரை மஞ்சு வாரியர் சென்றிருந்தாலும் அவர்தான் பைக்கை ஓட்டினாரா என்பது குறித்த தகவல்கள் சரியாக தெரியாத நிலையில் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விரைவில் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K